Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Tuesday, June 7, 2016

மைதானத்தில் 120 சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சி செய்வேன்: கோலி

120%
இந்தியாவின் டி20 கிரிக்கெட்டின் ‘ரன் மெஷின்’ என்று அழைக்கக்கூடிய அளவிற்கு ரன்கள் குவிக்கும் விராட் கோலி, தான் மைதானத்திற்கு களம் இறங்கியதும் 120% சதவீத பங்களிப்பை கொடுக்க முயற்சி செய்வேன் என்றார்.



இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனுக்கு இந்த வருடம் அதிர்ஷ்ட காலம் என்று கூறலாம். ஏனெனில், இந்த வருட தொடக்த்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போதில் இருந்தே விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த தொடருக்குப்பின் நடந்த டி20 ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றில் அசத்தினார். அதன்பின் தற்போது நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் யாரும் நம்ப முடியாத அளவிற்கான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் 973 ரன்கள் குவித்தார். இதில் நான்கு சதங்களும், 7 அரைசதங்களும் அடங்கும். இந்த ஐ.பி.எல். தொடரில் 83 பவுண்டரிகளும், 38 சிக்சர்களும் விளாசினார்.

இவரது அபரீதமான இந்த ஆட்டம் வரும் சர்வதேச போட்டிகளிலும் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் விராட் கோலி கலந்து கொண்டார். இந்த விழாவின்போது விராட் கோலியுடன் இந்த அபார ஆட்டம் சர்வதேச போட்டியிலும் தொடருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த அபரீதமான ரன் சராசரி என்னுடன் தொடருமா? என்பது எனக்குத் தெரியாது. இருந்த போதிலும் இந்த ஆட்டத்தை சர்வதேச போட்டியிலும் வெளிப்படுத்துவற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

மைதானத்திற்குள் இறங்கியவடன் 120 சதவீதம் பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதற்காக என்ன செய்ய முடியும் என்பதை வெளிக்கொண்டு வர முயற்சி செய்வேன். ஆனால், அதன் முடிவு நமது கையில் இல்லை’’ என்றார்.

இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல இருக்கிறது. இதில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி சந்திக்கிறது.

No comments:

Post a Comment