Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Monday, June 6, 2016

கோபா அமெரிக்கா: மெக்சிகோவிற்கு எதிரான

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று இரண்டு லீ்க் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஜமைக்கா- வெனிசுலா அணிகள் மோதுகின்றன. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மெக்சிகோ- உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி பரபரப்பாக காணப்படும்.


இந்த நிலையில் உருகுவே அணியின் முன்னணி வீரர் சுவாரஸ் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ் இடம்பெறாதது குறித்து மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் ஜூவான் கார்லோஸ் ஓசோரியா கூறுகையில் ‘‘உலகளவில் முக்கிய ஐந்து வீரர்களில் ஒருவராக கருதப்படும் சுவராஸ் விளையாடினாலும், அவர் ஆச்சரியத்தை ஏற்படுத்தப்போவதில்லை’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த உருகுவே அணியின் பயிற்சியாளர் ஆஸ்கர் தபரேஸ் கூறுகையில் ‘‘அவர் ஒரு கால்பந்து வீரர், அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவது எப்போதும் எங்களுக்கு ஆச்சரியம்தான். ஆனால், தற்போது வரை அவர் விளையாடுவதற்கு தயாராகவில்லை’’ என்றார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தொடைப்பகுதியில் சுவராஸூக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

19 முறை கோபா அமெரிக்க சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள உருகுவே அணி தற்போது மெக்சிகோவை காட்டிலும் சற்று பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. மெக்சிகோ அணி தனது கடைசி 19 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததில்லை. அத்துடன் கடந்த 730 நிமிடங்களாக அந்த அணிக்கெதிராக யாரும் கோல்கள் அடித்ததும் இல்லை. 

இந்த தொடரை அர்ஜென்டினா, பிரேசில் அல்லது மெக்சிகோ ஆகிய மூன்று அணிகளில் ஒன்றுதான் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment