![]() |

இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடைபெறுவதுபோல் வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணி அடுத்த மாதம் 6-ந்தேி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்குகிறது.
கரீபியன் லீக் தொடர் நடக்கும்போது சர்வதேச போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் விரும்புவதில்லை. ஆனால், கடந்த வருடமே இந்தியாவிற்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாட முடிவு செய்தது. ஆனால் கடந்த வாரம்தான் தேதி உறுதியானது.
இந்த தேதி கரீபியன் லீக் தொடருடன் இணைந்து வருவதால் லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச வீரர்கள் இடம்பெறுவது குறித்து தெளிவற்ற நிலைமை இருந்தது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் விளையாடும் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, ஆல் ரவுண்டர் பிராத்வைட், லெக்ஸ்பின்னர் தேவேந்திர பிஷூ ஆகியோரை கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
முத்தரப்பு கிரிக்கெட் தொடர் முடிந்து நான்கு நாட்கள் கழித்து கரீபியன் பிரீமியல் லீக் தொடர் தொடங்குகிறது. அந்த தேதியில் இருந்த மேற்குறிப்பிட்ட வீரர்கள் ஜூலை 11-ந்தேதி வரை லீக்கில் விளையாடலாம். அதன்பிறகு இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் 21-ந்தேதி தொடங்க இருப்பதால் சர்வதேச அணிக்கு திரும்பிவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment