
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள்
மோதும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும்.
பார்படோசில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்தது. சாமுவேல்ஸ் 125 ரன்னும், ராம்தின் 91 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 15 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
No comments:
Post a Comment