Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Wednesday, June 8, 2016

ஆஸி.க்கு எதிராக பகல்- இரவு ஆட்டத்தில் விளையாட தென்ஆப்பிரிக்கா சம்மதம்

நவம்பர் மாதம் தென்ஆப்பி்ரிக்கா அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது பகல்- இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.


தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இதில் ஒரு போட்டியை பிங்க் பந்தில் அதாவது பகல்-இரவு போட்டியாக நடத்த ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்கு தற்போது தென்ஆப்பிரிக்கா அணி சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனடிப்டையில் முதல் டெஸ்ட் பெர்த்திலும், 2-வது டெஸ்ட் ஹோப்ர்டடிலும் நடக்கிறது. அதன்பின் 3-வது டெஸ்ட் நவம்பர் மாதம் 24-ந்தேதி முதல் 28-ந்தேதி அடிலெய்டில் நடக்கிறது. இந்த டெஸ்டுதான் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது.

ஏற்கனவே, கடந்த வருடம் கிரிக்கெட் வரலாற்றிலேயே பகல்- இரவு டெஸ்ட் முதன்முறையாக அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் அணியுடனும் பகல்-இரவு ஆட்டம் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment