Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Friday, June 10, 2016

இந்தியா-ஜிம்பாப்வே நாளை மோதல் ஒருநாள் போட்டி தொடர்:

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஒவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
 click this image





டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஒவர் போட்டிகளில் விளையாடுகிறது.

அனைத்து ஆட்டங்களும் ஹராரேவில் நடக்கிறது. ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இத்தொடரில் விராட் கோலி, ரோகித்சர்மா, தவான், அஸ்வின் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொடர் இளம் வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க நல்ல வாய்ப்பாகும். இதை அவர்கள் பயன்படுத்தி கொள்வது அவசியமாகும்.

இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, பரிந்தர் ஸ்ரன், தவன் குல்கர்னி அக்ஷர் பட்டேல், சாகல் ஆகியோர் உள்ளன.

பேட்டிங்கில் மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், கருண் நாயர், மன்தீப்சிங் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. புதிய அணியை கேப்டன் டோனி எப்படி கையாள்வார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா, மசகட்சா, சிகும்புரா, சீன் வில்லியம்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு பலமாகும். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் ஜிம்பாப்வே இழந்தது.

அதற்கு பதிலடி கொடுக்க ஜிம்பாப்வே அணி வீரர்கள் முயல்வார்கள். மேலும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இல்லாததால் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்தியா:- டோனி (கேப்டன்), மனிஷ் பாண்டே, அம்பதி ராயுடு, பும்ரா, யுஸ்வேந்திர சாகல், ரிஷி தவான், பைஸ்பாசல், கேதர் ஜாதவ், தவால் குல்கர்னி, மன்தீப்சிங், கருண் நாயர், அக்சர் பட்டேல், லோகேஷ் ராகுல், பரிந்தர் ஸ்ரன், ஜெய்தேவ், உன்ட்கட், ஜெயந்த் யாதவ்.

ஜிம்பாப்வே:- கிரீமேர் (கேப்டன்), முடாம்பி, பீட்டர்முர், சிங்கும்புரா, சிபந்தாசீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, முஜார்பானி, நெவிலிம்ட் ஷிலா, டொனால்டு டிரிபானோ, மருமா, வெல்லிங்டன், மசகட்சா, சட்ரா ஹேமில்டன் மசகட்சா, ஜிஸ்ரோ, இர்வின், ஷிபாபா.

No comments:

Post a Comment