Sri lanka

Sri lanka
Sri lanka

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

பது/ கோணக்களை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2016/08/17 GONAKELLE TAMIL MAHA VIDIYALAYA ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING 2016/08/17

The best batsman in the world? உலகில் சிறந்த துடுப்பாட்ட வீரர்?

Monday, June 6, 2016

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பரிசோதிக்கும் இங்கிலாந்து

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை பரிசோதிக்கும் தொடராக இருக்கும் என்று மொகமது யூசுப் கூறியுள்ளார்.
இதுகுறித்து மொகமது யூசுப் கூறுகையில் ‘‘எனக்கு ஒரு கவலை என்னவெனில், பாகிஸ்தான் அணி சில வருடங்களாக தங்கள் சொந்த மைதானமாக கருதப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மைதானங்களிலேயே விளையாடி விட்டது. தற்போது பாகிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தில் இருக்கிறது. இதை அப்படியே தக்கவைத்துக் கொள்ள கடினமான பாதையில் அவர்கள் பயணிக்க வேண்டும்.

இங்கிலாந்து மற்றும் யு.ஏ.இ. ஆகியவற்றிற்கிடையிலான சூழ்நிலை முற்றிலும் வேறுபாடானது. இங்கிலாந்து சூழ்நிலையில் அபார பந்து வீசும் பிராட், ஆண்டர்சனை எதிர்த்து விளையாட இருக்கும் பாகிஸ்தான் 



பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் ஒரு பரிசோதனையாகும்.
இங்கிலாந்து தொடர் பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாக இருக்கும். எங்களுடைய முதல் நோக்கமே, தற்போது இலங்கை அணி இங்கிலாந்திடம் சிக்கி தவிப்பதுபோல் இருக்கக்கூடாது என்பதுதான். பாகிஸ்தான் அணியில் அனுபவ பேட்ஸ்மேன் மற்றும் ஆற்றல்மிக்க பந்து வீச்சாளர்கள் இருப்பது சாதகமான விஷயம்.
இலங்கையை விட பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும். ஏனென்றால், மிஸ்பா, யூனிஸ்கான், அசார், மற்றும் ஆசாத் ஷபிக் போன்றோர் உள்ளனர். இருந்தாலும், இங்கிலாந்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரைவில் தங்களை சரி செய்து கொள்ள வேண்டியது முக்கியம்’’ என்றார்.
மொகமது யூசுப் பாகிஸ்தான் அணிக்காக 90 டெஸ்ட் மற்றும் 288 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

No comments:

Post a Comment